December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

பொருளாதாரத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது; ரிசர்வ் வங்கி ஆளுநர்!

கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், “கொரோனா தொற்றானது, சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.” என, எஸ்பிஐ வங்கியின் 7வது பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

“கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றானது நமது பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் வலுவான தன்மையை சோதிப்பதாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சியே ரிசர்வ் வங்கியின் “முன்னுரிமை” என்றும், “நிதி ஸ்திரத்தன்மையின் அம்சத்திற்கு சம முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்றும் தாஸ் கூறியுள்ளார்.