December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முடிவை கைவிட்டது இந்திய தேர்தல் ஆணையம்?

தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறை பீகார் சட்டமன்றத் தேர்தலில் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முடிவை நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கைவிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, 65 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தேர்தல் ஆணைய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதைக் கைவிட வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.