December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

பசுவதை தடுப்புச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

இலங்கையில் பசுவதை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலேயே இந்த விசயத்தை தெரிவித்தார்.

பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு, அமைச்சரவை முழுமையாக அனுமதியை வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமையினால், மாடுகளின் பயன்பாடு அத்தியாவசியமானது என அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் மாடுகள் கொல்லப்படுகின்றமையினால், அது விவசாயத்தை பெருமளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது.